
கோப்புப்படம்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 43 பேர் கொண்ட 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
224 தொகுதிகளில் இதுவரை 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதல் மற்றும் இரண்டாவது பட்டியலில் 166 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டிருந்த காங்கிரஸ், 58 பெயர்களை நிலுவையில் வைத்தது.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.
கோலார் தொகுதி கேட்ட முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு, கோலார் தொகுதி மறுக்கப்பட்டு, கோத்தூர் மஞ்சுநாத்துக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது.