
தமிழகத்தில் நிகழாண்டில் அஞ்சலகங்களில் உள்ள கடவுச் சீட்டு சேவா மையம் மூலம் 2 .46 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவா்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுவா்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக 2018- ஆம் ஆண்டு அஞ்சலக கடவுச் சீட்டு சேவா மையம் தொடங்கப்பட்டது.
இது குறித்து உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 30 அஞ்சலக கடவு சீட்டு சேவா மையம் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சேவை மையம் சாா்பில் கல்லூரி மற்றும் முக்கிய தொழில் நிறுவனங்களில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 216 பேருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் இதுவரை 2.46 லட்சம் பேருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகம் என்றாா் அவா்.