
தில்லி லோதி ரோட்டில் அமைந்துள்ள இந்தோ- திபெத் (ஐடிபிக்யூ) எல்லை பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தலைமையகத்தில் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினா் 5 தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக வெளியாகவில்லை.