
கோப்பிலிருந்து..
கர்னால்: ஹரியாணா மாநிலம் கர்னாலில் மூன்று மாடிகளைக் கொண்ட அரிசி ஆலை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹரியானாவில் உள்ள கர்னாலில் மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் அரிசி ஆலை இயங்கி வந்தது. இந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், பல அரிசி ஆலை தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்ததும் அரிசி ஆலைக்குள் தூங்குவது வழக்கம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தீயணைப்பு படையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.