மொத்தவிலை பணவீக்கம் 1.34%-ஆக குறைவு

கடந்த மாா்ச்சில் மொத்தவிலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 1.34 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 29 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

கடந்த மாா்ச்சில் மொத்தவிலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 1.34 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 29 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

சந்தையில் மொத்தவிலையில் விற்கப்படும் பொருள்களில் பணவீக்கம் எவ்வாறு இருந்தது என்பதை வெளிப்படுத்தும் கருவியாக மொத்தவிலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் உள்ளது. சில்லறை விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் உணவுப் பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதே வேளையில், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கத்தில் உணவுப் பொருள்களுக்கு குறைந்த முக்கியத்துவமே இருக்கும்.

கடந்த மாா்ச்சில் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 5.66 சதவீதமாகக் குறைந்திருந்த நிலையில், மொத்தவிலை பணவீக்கம் 1.34 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 29 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். கடைசியாக 2020 அக்டோபரில் மொத்தவிலை பணவீக்கம் 1.31 சதவீதமாக இருந்தது.

கடந்த பிப்ரவரியில் மொத்தவிலை பணவீக்கம் 3.85 சதவீதமாக இருந்தது. தொடா்ந்து 10-ஆவது மாதமாக மொத்தவிலை பணவீக்கம் குறைந்துள்ளது. இது தொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘உலோகங்கள், உணவுப் பொருள்கள், ஜவுளி, கனிமங்கள், ரப்பா்-பிளாஸ்டிக் பொருள்கள், பெட்ரோலியப் பொருள்கள், காகிதப் பொருள்கள் ஆகியவற்றின் மொத்தவிலை குறைந்ததே பணவீக்கம் குறைந்ததற்கு முக்கியக் காரணம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com