
பிகாரில் அதிகபட்சமாக இன்று 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலையால் பிகார் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அங்குள்ள உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, 'பாட்னாவில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. வெப்ப அலையால் பகலில் வேலை செய்வது கடினமாக உள்ளது. இதிலிருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
ராஜஸ்தானில் இன்று 38 டிகிரி செல்சியஸும் உத்தர பிரதேசத்தில் 41 டிகிரி செல்சியஸும் தில்லியில் 40 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.