
சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்கச் சென்ற பெண் அதிகாரியை கற்களை கொண்டு கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள பிஹ்தா நகரின் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பெண் அதிகாரி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட கும்பல் பெண் அதிகாரி உள்பட அனைவரையும் சரமாறியாக தாக்கியுள்ளனர். பெண் அதிகாரியை இழுத்து கீழே தள்ளி அடித்ததுடன் கற்களை கொண்டும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் விடியோ சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து 44 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பந்தபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.