
கோப்புப்படம்
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ஹரியாணா வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில் ஹரியாணா ஆளுநர் மற்றும் வேளாண் பல்கலைக்கழக தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா விழாவுக்கு தலைமை தாங்குவதாக துணைவேந்தர் பல்தேவ் ராஜ் கம்போஜ் தெரிவித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 290 இளங்கலை, 447 முதுகலை மற்றும் 128 முனைவர் பட்டங்கள் வழங்கப்படும் என்றும், முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்துகொள்வார் என்றும் அவர் கூறினார்.