அடுத்த 3 நாள்களுக்கு இந்த மாநிலங்களில் வெப்பஅலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் 

நாடு முழுவதும் கோடைக்கால வெயில் தகித்து வரும் நிலையில், அடுத்து மூன்று நாள்களுக்கு கடுமையான வெப்பம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
அடுத்த 3 நாள்களுக்கு இந்த மாநிலங்களில் வெப்பஅலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் 

நாடு முழுவதும் கோடைக்கால வெயில் தகித்து வரும் நிலையில், அடுத்து மூன்று நாள்களுக்கு கடுமையான வெப்பம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

பொதுவாக அக்னி நட்சத்திரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும். ஆனால் இந்தாண்டு முன்னதாகவே வெயில் வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் தலைக்காட்ட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெப்ப அலை மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு 9 மாநிலங்களில் வெப்ப அலை தொடரும்  என்றும்,  குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரம், பிகார் ஆகிய 3 மாநிலங்களிலும் வெப்பஅலை கடுமையாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா, ஜார்க்கண்ட், உ.பி., கங்கை நதிக்கு தெற்கே உள்ள மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும். சராசரியாக இயல்பை விட 4.5 முதல் 6.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை எட்டியது. ராஜஸ்தானின் பூந்தி (45.2) உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (44.6), ஒடிசாவின் பாரபடா (44.2), மத்தியப் பிரதேசத்தின் ஜான்சி (43.6)ஆந்திரப் பிரதேசத்தின் நந்திகம (43.2), ஒடிசாவின் ஜார்சுகுடா (43.4) மகாராஷ்டிரத்தின் சந்திராபூர் (43.2) மற்றும் மத்தியப் பிரதேசத்தின் டாடியா (43.2) ஆகிய இடங்கள் இன்று இந்தியாவில் வெப்பமான இடங்களாகும் என்று தனியார் வானிலை கண்காணிப்பு நிறுவனமான ஸ்கைமெட் வெதர் தெரிவித்துள்ளது.

கடுமையான வெப்பம் நிலவும் என்பதால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நாள்பட்ட நோயாளிகள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். ஹீட் ஸ்ட்ரோக் போன்ற வெப்ப நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஓஆர்எஸ் கரைசல், பழச்சாறு மற்றும் அதிக தண்ணீர் குடிக்குமாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com