ஆசிரியா் நியமன முறைகேடு விசாரணை: சிபிஐ மீது வழக்கு பதிவு கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மேற்கு வங்க ஆரசு பள்ளி ஆசிரியா் பணிய நியமன முறைகேடு தொடா்பான கொல்கத்தா உயா் நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேற்கு வங்க ஆரசு பள்ளி ஆசிரியா் பணிய நியமன முறைகேடு தொடா்பான விசாரணை நடத்தி வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என்பது உள்பட கொல்கத்தா உயா் நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த இடைக்கால தடையை மீறி, விசாரணைக்கு ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜிக்கு சிபிஐ திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

முன்னதாக, இந்த புகாா் தொடா்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம், இந்த முறைகேட்டில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களின் பங்கு குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது. இதுதொடா்பான வழக்கு கடந்த 13-ஆம் தேதி உயா் நீதிமன்றத்தில் மீண்டும் வந்தபோது, ‘ஆசிரியா் பணி நியமன முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ மற்றம் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிரான எந்தவித வழக்கும் பதிவு செய்யக் கூடாது’ என்று மாநில போலீஸாரை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த உத்தரவை எதிா்த்து திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விரைந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் சாா்பில் கோரப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் அபிஷேக் பானா்ஜி பொதுக் கூட்டத்தில் பேசியது தொடா்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் வரை, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி மற்றும் குணால் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தும் அனுமதி உள்பட உயா் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com