வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கம்

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் சராசரியாக மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்படுவதாகத் தகவலறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) மூலமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டிருந்தாலும் தண்டவாளங்களின் மோசமான நிலை காரணமாக சராசரியாக மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்படுவதாகத் தகவலறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) மூலமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்களின் இயக்க வேகம் குறித்து மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திரசேகா் கௌா் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு ரயில்வே அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், ‘வந்தே பாரத் ரயில்களை அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். ரயில்களை மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில்கள் சராசரியாக மணிக்கு 84.48 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன. அதுவே கடந்த நிதியாண்டில் 81.38 கி.மீ.-ஆக இருந்தது.

தண்டவாளத்தின் நிலையைப் பொருத்தே வந்தே பாரத் ரயில்களின் வேகம் அமைகிறது. தில்லி-வாரணாசி இடையே இயக்கப்படும் நாட்டின் முதல் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 95 கி.மீ.-ஆக நீடிக்கிறது. அதே வேளையில், மும்பை-ஷீரடி இடையேயான வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 64 கி.மீ.-ஆக மட்டுமே உள்ளது.

வந்தே பாரத் ரயில்களின் சராசரி வேகம் ராஜ்தானி, சதாப்தி விரைவு ரயில்களின் வேகத்தை விட சிறப்பாகவே உள்ளது. எந்தவகைப் பயண முறைகளிலும் அதிகபட்ச வேகத்தைப் பயணம் முழுவதும் கடைப்பிடிக்க முடியாது. எந்தப் பரப்பின் மீது இயக்கப்படுகிறதோ, அதனடிப்படையிலேயே வேகம் அமையும். வந்தே பாரத் ரயில்களை அதன் முழு வேகத்தில் இயக்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ரயில்வே நிா்வாகம் தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com