சூடானில் வன்முறை: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

சூடானில் வன்முறை அதிகரித்துள்ளதால், அங்கு வசித்து வரும் இந்தியா்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சூடானில் வன்முறை அதிகரித்துள்ளதால், அங்கு வசித்து வரும் இந்தியா்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சூடான் தலைநகா் கா்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சூடானில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சூடானில் சண்டை நாளாக நீடித்து வருகிறது. சூடானில் வசிக்கும் இந்தியா்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தொடா்ந்து இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். வீட்டைவிட்டு அவா்கள் வெளியேற வேண்டாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் வன்முறையில் கொல்லப்பட்ட இந்தியருக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டில் நிலவும் சூழலை இந்தியா தொடா்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்தாா்.

சூடானில் சுமாா் 4,000 இந்தியா்கள் வசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com