

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் சிறை செல்வார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, இன்று, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஜாமீனில் உள்ளனர். நான் ராகுல் காந்தியிடம் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் என்னை யாரும் சிறைக்கு அனுப்பவில்லை.
நிதீஷ் குமார் எனது நல்ல நண்பர், ஆனால் அவர் பிரதமர் வேட்பாளர் என்று ஒருபோதும் கூறவில்லை. இன்று அவரை சந்தித்து இதுதொடர்பாக பேசுவேன். நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கும். மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைக்க, பொருளாதார வளர்ச்சியை ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றார்.
இதனிடையே அதிக் அகமதுக்கு ஆதரவாக பாட்னாவில் கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்த கேள்விக்கு, இந்தியா ஒரு ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம். ஆனால், அதிக் அகமதுவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புபவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.