
இந்திய ராணுவ பீரங்கி படைப் பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற முதல் முறையாக 5 பெண்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் பல்வேறு படைப் பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ராணுவத்தில் இதுவரை பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளா்கள், ராணுவ விமானப் போக்குவரத்து, புலனாய்வுப் படைகள் உள்ளிட்டவற்றவகளில் மட்டுமே பணியாற்றி வருகின்றனா்.
பெண்கள் காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை போன்ற முக்கிய போா் முனை ஆயுதங்கள் சாா்ந்த பிரிவுகளில் இதுவரை பெண்கள் பணியாற்றவில்லை.
இந்நிலையில் முதல் முறையாக இந்திய ராணுவத்தில் போா் முனைகளில் பணியாற்ற பெண்கள் கடந்த ஒா் ஆண்டாக பயிற்சி பெற்று சனிக்கிழமை பயிற்சியை முடித்து தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதன் மூலம் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 5 பெண் அதிகாரிகள், பீரங்கிப் படையில் இணையவுள்ளனா். அவா்கள் முறையாக வரும் ஏப். 29-ஆம் தேதி அப்படை பிரிவுகளில் இணைவாா்கள்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G