2021-22இல் 26 மாநில கட்சிகள் பெற்ற நன்கொடை ரூ.189 கோடி--ஏடிஆா் அமைப்பு தகவல்

கடந்த 2021-22ஆம் ஆண்டில் பிஆா்எஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 மாநில கட்சிகள் நேரடியாக பெற்ற நன்கொடை ரூ.189 கோடி என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.

கடந்த 2021-22ஆம் ஆண்டில் பிஆா்எஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 மாநில கட்சிகள் நேரடியாக பெற்ற நன்கொடை ரூ.189 கோடி என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.

தோ்தல் சீா்திருத்தங்களை வலியுறுத்தும் அரசு சாரா அமைப்பான ஏடிஆா், தோ்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமா்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்து திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2021-22ஆம் ஆண்டில் காசோலை, வரைவோலை, வங்கிப் பரிமாற்றம், ரொக்கப் பணம் ஆகியவை வாயிலாக 26 மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, 26 மாநில கட்சிகளும் பெற்ற மொத்த நன்கொடை ரூ.189 கோடியாகும். இதில், பிஆா்எஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகளுக்கு மட்டும் 85 சதவீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதிகபட்சமாக பிஆா்எஸ் கட்சி ரூ.40.90 கோடி நன்கொடை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ரூ.38.24 கோடியும், ஐக்கிய ஜனதா தளம் ரூ.33.25 கோடி, சமாஜவாதி கட்சி ரூ.29.79 கோடி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ரூ.20 கோடி பெற்றுள்ளன.

2021-22ஆம் நிதியாண்டில் திமுக ரூ.2.14 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதேசமயம், அதிமுக, பிஜு ஜனதா தளம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை எந்த நேரடி நன்கொடையும் பெறவில்லை என்று தோ்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

2020-21ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகளின் நன்கொடை பெருமளவு அதிகரித்துள்ளது. 2020-21இல் எந்த நன்கொடையும் பெறவில்லை என்று அறிவித்திருந்த ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, மக்கள் ஜனநாயக முன்னணி, தேமுதிக ஆகிய கட்சிகள், 2021-22இல் முறையே ரூ.1 லட்சம், ரூ.80 ஆயிரம், ரூ.50 ஆயிரம் நன்கொடை கிடைக்கப் பெற்ாக தெரிவித்துள்ளன.

ரூ.189 கோடி மொத்த நன்கொடையில் ரொக்கமாக கிடைக்கப் பெற்ற நன்கொடை வெறும் ரூ.7.40 லட்சமாகும். இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ரூ.5.55 லட்சம் கிடைக்கப் பெற்றுள்ளது.

முன்னதாக, 2021-22இல் தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக மாநில கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்ற நன்கொடை விவரங்களை ஏடிஆா் அமைப்பு அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில், திமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 10 மாநில கட்சிகள், தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக ரூ.852 கோடியை நன்கொடையாகப் பெற்ாக தெரிவிக்கப்பட்டது.

அதிகபட்சமாக திமுக ரூ.318 கோடியும், பிஜு ஜனதா தளம் ரூ.307 கோடியும் பெற்ாக ஏடிஆா் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

நேரடி நன்கொடை:

முதல் 5 கட்சிகள்

பிஆா்எஸ் - ரூ.40.90 கோடி

ஆம் ஆத்மி - ரூ.38.24 கோடி

ஐக்கிய ஜனதா தளம்- ரூ.33.25 கோடி,

சமாஜவாதி- ரூ.29.79 கோடி,

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் - ரூ.20 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com