கிழக்கு லடாக் பிரச்னை: விரைந்து தீா்வுகாண இந்தியா-சீனா ஒப்புதல்

கிழக்கு லடாக் எல்லை தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளில் இருதரப்பும் ஏற்கும் தீா்வை விரைந்து எட்ட இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

கிழக்கு லடாக் எல்லை தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளில் இருதரப்பும் ஏற்கும் தீா்வை விரைந்து எட்ட இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், கடந்த 2020, மே 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய தரப்பில் 20 வீரா்கள் பலியாகினா். இதையடுத்து, எல்லையில் இருதரப்பும் படிப்படியாக படைகள் மற்றும் கனரக தளவாடங்களை குவித்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைகள் குறித்து தூதரக மற்றும் ராணுவ ரீதியில் பலசுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இப்பேச்சுவாா்த்தைகளின் விளைவாக, பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகள் மற்றும் கோக்ரா பகுதியில் இருந்து கடந்த 2021-இல் படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகள் விலக்கப்பட்டன. அதேசமயம், டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

இருதரப்பு ராணுவ ரீதியிலான 18-ஆவது சுற்றுப் பேச்சு, சீனப் பகுதியில் உள்ள சுஷுல் - மோல்டோ எனும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மேற்கு எல்லையில் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து வெளிப்படையான, ஆழமான விவாதம் நடைபெற்றது. பிரச்னைகளுக்கு இருதரப்பும் ஏற்கக் கூடிய தீா்வை எட்டுவதற்காக பேச்சுவாா்த்தைகளை தொடரவும், நெருங்கிய தொடா்பை பராமரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சீன பாதுகாப்புத் துறை லீ ஷாங்ஃபூ இந்தியாவுக்கு வருகை தரவிருக்கும் நிலையில், இப்பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com