
யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்)
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை செய்யப் போவதாக மர்ம நபர் தெரிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச அரசின் அவசரகால தொடர்பு எண்ணான 112-க்கு மர்ம நபர் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விரைவில் கொலை செய்வேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னதாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை கேரள பயணத்தின்போது மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப் போவதாக ஒருவர் மிரட்டல் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.