
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை கூறுகையில்,
மாநிலத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு 542 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 13,43,202 ஆக உள்ளது.
தொற்று பாதிப்பு ஒருவர் பலியாகியுள்ளன நிலையில் மொத்த உயிரிழப்பு 9,209 ஆகும்.
மாநிலத்தில் புதிதாக 7,571 பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில் 542 பாதிப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து தொற்று விகிதம் 7.1 ஆக உள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,270 ஆக உள்ளது. 257 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை 13,30,488 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒரே வாரத்தில் புதிதாக 3000 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கரோனா தொற்று அதிகரித்ததையடுத்து சுகாதாரப் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...