ரஜினியின் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது: ஆந்திர அமைச்சர் ரோஜா 

சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து ரஜினிகாந்த் பேசியதற்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது: ஆந்திர அமைச்சர் ரோஜா 
Updated on
1 min read

சந்திரபாபு நாயுடுவை பற்றிய ரஜினியின் பேச்சு தனக்கு சிரிப்பை வரவழைக்கிறது என்று ஆந்திர அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான  என்டி ராமராவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. என்.டி ராமராவ் குடும்பத்தினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி, என்டி ராமராவ் மகன் பாலகிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்த உட்பட ராமாராவ் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

அப்போது சந்திரபாபு நாயுடுவை புகழந்து பேசிய ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே ஐதராபாத் நகரம் தற்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்துள்ளது என்று கூறினார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து ரஜினிகாந்த் பேசியதற்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாபட்டலாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, ரஜினிகாந்த்தின் நேற்றைய பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது. 

20 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத சந்திரபாபு நாயுடு, ஐதரபாத் நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?. என்டி ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கையில், அவருடைய ஆசி இவருக்கு எப்படி கிடைக்கும். ரஜினிகாந்த்திற்கு இது தெரியவில்லை என்றால், என்.டி.ராமராவ் பேச்சு அடங்கிய சிடியை அனுப்பி வைக்கிறேன். அதன்மூலம் என்டி ராமராவ் சந்திரபாபு நாயுடு பற்றி கூறியதை ரஜினி தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com