புணேவில் 1000 இடங்களில் மனதின் குரல் உரை நேரடி ஒளிபரப்பு: பாஜக

பிரதமரின் 100ஆவது ‘மனதின் குரல்’ உரை நகரின் 1000 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று புணே நகர பாஜகவி தலைவர் ஜெகதீஷ் முலிக் தெரிவித்தார். .
புணேவில் 1000 இடங்களில் மனதின் குரல் உரை நேரடி ஒளிபரப்பு: பாஜக
Updated on
1 min read

பிரதமரின் 100ஆவது ‘மனதின் குரல்’ உரை நகரின் 1000 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று புணே நகர பாஜக தலைவர் ஜெகதீஷ் முலிக் தெரிவித்தார்.

பிரதமா் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக கடந்த 2014, அக்டோபா் முதல் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசும் அவா், பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயலாற்றும் நபா்களை பாராட்டி, அவா்களது பணிக்கு அங்கீகாரம் வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளாா். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷனில் பிரதமரின் உரை ஒலிபரப்பப்படுகிறது. 

அந்த வகையில், பிரதமரின் 100-ஆவது ‘மனதின் குரல்’ உரை ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) ஒலிபரப்பாகவுள்ளது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமா் மோடியின் உரை நேரலையாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் பிரதமரின் மாதாந்திர வானொலி உரையான மனதின் குரல் நகரின் 1000 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று புணே நகர பாஜகவி தலைவர் ஜெகதீஷ் முலிக் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து அபரிமிதமான பாராட்டுகள் கிடைத்துள்ளன. புணே நகரமும் இந்த முறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்கும், மேலும் நகரம் முழுவதும் 1000 இடங்களில் மனதின் குரல் உரையை ஒளிபரப்ப நகர பாஜக முடிவு செய்துள்ளது. புணே நகரில் உள்ள ஒவ்வொரு பாஜக சாவடியிலும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் பல்வேறு சங்கங்கள், கணேஷ் மண்டலங்கள் மற்றும் அமைப்புகளும் நிகழ்ச்சியை ஒளிபரப்பும். 

புணே மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் என்று முலிக் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com