
திரெளபதி முர்மு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) தொடா்பாக அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம், குடியரசுத் தலைவரிடம் தனது அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தது.
ஓபிசி பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களை உள்பிரிவுகளாக வகைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தகுதிகள், அளவீடுகள் குறித்த பரிந்துரைகளை அளிக்கும் வகையில் தில்லி உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஜி. ரோகிணி தலைமையில் ஓபிசி ஆணையம் கடந்த 2017-இல் அமைக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 13 முறைகள் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் ரோகிணி ஆணையத்தின் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டதாக மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓபிசி பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே சமச்சீரற்ற முறையில் இடஓதுக்கீட்டின் பயன்கள் சென்றடைவது குறித்து ஆராய்வதையும் இந்த ஆணையம் முக்கியப் பணிகளாக கொண்டிருந்தது.