பாடகா் மூஸேவாலா கொலை: தாதா சச்சின் பிஷ்னோய் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

பாடகா் சித்து மூஸேவாலா கொலையில் தொடா்புடைய தாதா சச்சின் பிஷ்னோய் அஜா்பைஜானிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Updated on
1 min read

பாடகா் சித்து மூஸேவாலா கொலையில் தொடா்புடைய தாதா சச்சின் பிஷ்னோய் அஜா்பைஜானிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

பஞ்சாபி பாடகா் மூஸேவாலா கடந்த ஆண்டு மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகளான சச்சின் பிஷ்னோய், அன்மோில் பிஷ்னோய் உள்ளிட்டோா் மூஸேவாலா கொலைக்கு முன்பாகவே போலி கடவுச்சீட்டுகளை (பாஸ்போா்ட்) பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனா்.

கொலையாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவிய சச்சின் பிஷ்னோய், வழக்கு விசாரணை அதிகாரிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் வகையில், மூஸேவாலாவை தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ாகத் தெரிவித்து வந்தாா்.

முதலாவதாக துபைக்குத் தப்பிச் சென்ற அவா், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) நல்லுறவின் காரணமாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என்பதால், அஜா்பைஜானுக்கு தப்பிச்சென்றாா்.

அந்நாட்டில் கடந்த ஆண்டு அவா் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த தேவையான ஏற்பாடுகளை தில்லி போலீஸாா் மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், அஜா்பைஜான் தலைநகா் பாகுவிலிருந்து தில்லிக்கு செவ்வாய்க்கிழமை காலை பிஷ்னோய் அழைத்து வரப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லி நீதிமன்றத்தில், பிஷ்னோய் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com