
இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஒடிசா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது பல்வேறு அரசு சார்ந்த கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு 10.40 மணிக்கு ஒடிசாவின் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைவார். அடுத்த நாள் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார். அதன்பின் இடதுசாரி தீவிரவாதம் மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டங்களில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொள்ள உள்ளார். இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நவீன் பட்நாயக் இருவரும் சந்தித்து கொள்வது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை. நாளை மாலை விமான நிலையத்தில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் அமித் ஷா அங்கிருந்து தில்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தது குஜராத்தில் ஏற்பட்ட பிபர்ஜாய் புயலால் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...