நம்பிக்கையில்லா தீர்மானம்: பாஜகவுக்கு நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆதரவு!

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்: பாஜகவுக்கு நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆதரவு!

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையில் இன்று(செவ்வாய்க்கிழமை) விவாதம் நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மணிப்பூர் விவாகரத்தை முன்வைத்து மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

இதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு (பாஜகவுக்கு ஆதரவு) தெரிவித்துள்ளது. 

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்ததால் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அதை எதிர்க்கிறது என்று அக்கட்சியின் எம்.பி. பினாகி மிஸ்ரா கூறியுள்ளார். 

பிஜேடி அரசியல் ரீதியாக பிஜேபிக்கு எதிரானது என்று நினைத்தாலும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எங்களால் ஆதரிக்க முடியாது. ஒடிசாவுக்கு மத்திய அரசு செய்த பல விஷயங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று தெரிவித்தார். 

முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்கக் கோரி பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கிடம் பேசியதாகவும் அதற்கு பட்நாயக் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com