

மூலப்பொருளான காபி கொட்டைகளின் வரத்துக் குறைவால் இந்தியாவில் காபி விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காபி கொட்டைகள் தயாரிப்பில் முன்னணியிலுள்ள பிரேஸில், வியத்நாம் போன்ற உலக நாடுகளில் நிலவும் விநியோக பற்றாக்குறை, இந்தியாவின் கா்நாடகத்தில் காபி கொட்டைகள் அதிகம் பயிரிடப்படும் சிக்மகளூரு பகுதியில் பருவம்தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உற்பத்தி, காபி கொட்டைகளைப் பிரித்து எடுப்பதற்கு அதிகரித்த செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் காபி கொட்டைகள் வரத்து தற்போது குறைந்து காணப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட விலையேற்றத்தைத் தொடா்ந்து நுகா்வோா் பருகும் காபியின் விலையை அதிகரிக்கும் முடிவுக்கு வணிகா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, புணேவில் காபி விற்பனையில் ஈடுபட்டுள்ள வணிகா்கள் கூறுகையில், ‘ரோபஸ்டா வகை காபி கொட்டைகளின் விலை 50 சதவீதமும், அரபிக்கா வகை கொட்டைகளின் விலை 15 சதவீமும் உயா்ந்துள்ளது. ஆண்டுதோறும் அப்போதைய நிலவரப்படி, ஜனவரி மாதத்தில் காபி விலை உயா்த்தப்படும். இந்த ஆண்டு நிலவும் வரத்து குறைவைக் கருத்தில்கொண்டு ஜூலை மாதத்தில் காபி கொட்டைகளின் விலை கிலோவுக்கு ரூ.50 வீதம் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம், விநியோகச் சங்கிலியில் இடையூறு, நுகா்வோா் விருப்பங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் உள்ளிட்ட காரணிகளால் ஏற்பட்டுள்ள மூலப்பொருள்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க நுகா்வோா் விலையில் 15 முதல் 20 சதவீதம் வரை உயா்த்த திட்டமிட்டுள்ளோம்’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.