

புது தில்லி: மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியோ சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி.
அப்போது, அவர் பேசுகையில், பிரதமர் தனது உரையில் பெரும்பாலான நேரத்தை நகைச்சுவை செய்வதிலேயே கழித்தார். மணிப்பூரில் நான் நேரடியாகக் கண்டதை வைத்துதான் நாடாளுமன்றத்தில் பேசினேன். மணிப்பூர் பற்றி எரியும் போது, நாட்டின் பிரதமரோ அதை மறந்தது போன்று பேசியுள்ளார். நாட்டின் பிரதமரிடமிருந்து நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
இதையும் படிக்க.. ஜெயிலர் வெற்றி - நெல்சனுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!
மணிப்பூர் என்ற மிக முக்கியமான பிரச்னை குறித்து பேசுவார் என்று எதிர்பார்த்தால், பிரதமர் மோடியோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
பாரதமாதா என்ற வார்த்தை நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இந்திய ராணுவத்தை மணிப்பூருக்குள் அனுமதித்திருந்தால், இரண்டு நாள்களுக்குள் அங்கு அமைதி திரும்பியிருக்கும். ஆனால், ராணுவத்தின் மீது நம்பிக்கையில்லாததால் மணிப்பூருக்கு அனுப்பவில்லை. பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை. பிரதமருக்கான கடமை என்னவென்பதே நரேந்திர மோடிக்குத் தெரியவில்லை என்றும் ராகுல் காந்தி காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு வழிமுறைகள் இருந்தும் பிரதமர் அது எதையும் செய்யவில்லை. மேலும், மணிப்பூர் எரிவதைத் தடுக்க பிரதமர் மோடி விரும்பவில்லை. பிரதமர் மோடி, மணிப்பூர் செல்வதற்கான அறிகுறிகள் கூட தெரியவில்லை. நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியா என்ற கருத்தியலை பாஜக கொன்றுவிட்டது. ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டதைப் பார்த்ததேயில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.