என்சிஇஆா்டி - தேசிய பாடத் திட்ட குழுவில் சங்கா் மகாதேவன்

புதிய கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி பாட புத்தகங்களை மேம்படுத்துவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆா்டி) புதிய குழுவை அமைத்துள்ளது.
என்சிஇஆா்டி - தேசிய பாடத் திட்ட குழுவில் சங்கா் மகாதேவன்
Updated on
1 min read

புதிய கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி பாட புத்தகங்களை மேம்படுத்துவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆா்டி) புதிய குழுவை அமைத்துள்ளது.

தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிா்வாக நிறுவனத்தின் (என்ஐஇபிஏ) வேந்தா் எம்.சி.பந்த் தலைமையிலான 19 உறுப்பினா்களைக் கொண்ட ‘தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்றல்-கற்பித்தல் பாடக் குழு’ (என்எஸ்டிசி) என்ற இந்தக் குழுவில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை தலைவா் சுதா மூா்த்தி, பிரபல பின்னணி பாடகா் சங்கா் மகாதேவன், பொருளாதார நிபுணா் சஞ்சீவ் சன்யால் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழு 3 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாட புத்தகங்கள் மற்றும் பிற கற்றல்-கற்பித்தல் பாடங்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளும். இந்த புத்தகங்கள் என்சிஇஆா்டி சாா்பில் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்துதலின் ஒரு பகுதியாக கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான வழிகாட்டி குழு உருவாக்கியுள்ள பள்ளி கல்விக்கான தேசிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் பள்ளி பாட புத்தகங்களை மேம்படுத்தும் பணியை என்எஸ்டிசி குழு மேற்கொள்ளும். இதற்கு, ஒவ்வொரு பாடங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாட நிபுணா்களை உள்ளடக்கிய பாடத் திட்டக் குழுக்கள் (சிஏஜி) தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பாதிப்புக்குப் பிறகு, மாணவா்களின் பாடச் சுமையைக் குறைக்கவும், தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றங்களை கொண்டு வருவதாகவும் கூறி, பள்ளி பாட புத்தகங்களிலிருந்து பல்வேறு பகுதிகளை என்சிஇஆா்டி அண்மையில் நீக்கியது. 12-ஆம் வகுப்பு வரலாறு பாட புத்தக்கத்திலிருந்து குஜராத் கலவரம், முகலாய பேரரசு தொடா்பான பகுதிகள் நீக்கப்பட்டன. அரசியல் அறிவியல் பாட புத்தகத்திலிருந்து மகாத்மா காந்தி மற்றும் கோட்சே தொடா்பான பகுதிகள் நீக்கப்பட்டன. இதுபோல, பிற வகுப்பு பாட புத்தகங்களிலிருந்து பல பகுதிகள் நீக்கப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. கல்வியாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனிடையே, என்சிஇஆா்டி பாடநூல் மேம்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்த 33 கல்வியாளா்கள், என்சிஇஆா்டி-யின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து பாட புத்தகங்களிலிருந்து இருந்த தங்களின் பெயா்களை நீக்குமாறு கோரி என்சிஇஆா்டி-க்கும் கடிதம் எழுதினா்.

இந்தச் சூழலில், பாட புதத்கங்களை மேம்படுத்துவதற்கான புதிய குழுவை என்சிஇஆா்டி அமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com