
ராஜஸ்தான் காவலர் பயிற்சி அகாடெமியில் ரூ.11.73 கோடி செலவில் சைபர் கிரைம் விசாரனை மையம் அமைக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த புதிய சைபர் கிரைம் விசாரணை மையத்தில் காவல் அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்த பயிற்சி வழங்கப்படும். இந்த சைபர் கிரைம் விசாரணை மையம் மத்திய விசாரணை அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து தேவையான தகவல் குறித்து கலந்தாலோசிக்கலாம். சைபர் கிரைம் விசாரணை மையத்துடன் ரூ.7.50 கோடி செலவில் 400 மீட்டர் நீளமுள்ள ஓட்டப்பந்தய டிராக்குகளும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜெயிலர் படம் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன்!
இந்த ஓட்டப் பந்த டிராக் அமைக்கும் திட்டத்தை 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.