

உத்தரகண்டில் கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில பேரழிவு மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய
சார்தாம் யாத்திரை இன்றும், நாளையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி பக்தர்களின் தரிசனத்துக்காக ஏப்ரல் 22-ம் தேதி அக்ஷய தினத்தன்று தொடங்கியது.
கேதார்நாத் ஏப்.25-ம், பத்ரிநாத் ஏப்ரல் 27-ம் தேதியும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.