பிரியங்கா காந்தி வாராணசியில் போட்டியிட்டால்...: சஞ்சய் ரௌத்

பிரியங்கா காந்தி வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட்டால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.   
சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)
சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)

பிரியங்கா காந்தி வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட்டால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது, வாராணசி மக்கள் பிரியங்கா காந்தியை விரும்புகிறார்கள். பிரியங்கா காந்தி வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட்டால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். ரேபரேலி, வாராணசி மற்றும் அமேதிக்கான போராட்டம் பாஜகவுக்கு கடினமானது. 
நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் மோடியும் சந்திக்க முடியும் என்றால், ஏன் சரத் பவாரும் அஜீத் பவாரும் சந்திக்கக்கூடாது?. சரத் பவாரும் அஜித் பவாரும் சந்தித்துப் பேசினர் என்று ஊடகங்கள் மூலம் அறிந்தோம். இந்த சந்திப்பு குறித்து சரத் பவார் விரைவில் பேசுவார். 
இந்தியா அணி கூட்டத்திற்கு அஜித் பவாரை சரத் பவார் அழைத்ததாக நான் நினைக்கிறேன். அரசியலில் எதுவும் நடக்கலாம். அஜீத் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மகாராஷ்டிர மக்கள் தற்போதைய அரசால் மகிழ்ச்சியடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 
முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் தகுதியுடைவா்; அவருக்காக, கட்சி சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன் என்று பிரியங்காவின் கணவா் ராபா்ட் வதேரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com