அசாமில் வெள்ள பாதிப்புகள் குறைந்து மெதுவாக இயல்புநிலை திரும்புவதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 46 ஆயிரம் பேர் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்ஷய் குமார்!
இது தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கூறியதாவது: அசாமின் சிராங், தாராங், திமாஜி, தீப்ருஹர் மற்றும் சிவசாகர் மாவட்டங்களில் 45,700 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் சிவசாகர் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 23 ஆயிரம் பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து திமாஜியில் 20,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக மழை வெள்ளத்துக்கு எந்த ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. தற்போது, அசாமின் 247 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 5,743 ஹெக்டர் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.