நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சந்திரயான் 3: நிலவின் சுற்றுப்பாதை உயரம் 4 ஆவது முறையாக குறைப்பு!

நிலவின் ஈா்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவை குறைக்கும்  நான்காவது கட்ட முயற்சியை புதன்கிழமை (ஆக 16) வெற்றிகரமாக இஸ்ரோ மேற்கொண்டது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 4:51 am

DIN


பெங்களூரு: நிலவின் ஈா்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவை குறைக்கும்  நான்காவது மற்றும் கடைசி கட்ட முயற்சியை புதன்கிழமை (ஆக 16) வெற்றிகரமாக இஸ்ரோ மேற்கொண்டது.

நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

அதன் பின்னா், புவி வட்டப் பாதையில் வலம் வந்த விண்கலம், கடந்த 1-ஆம் தேதி புவி ஈா்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பாதைக்கு மாற்றப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக கடந்த 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 பயணிக்கத் தொடங்கியது. 

இதையடுத்து நிலவின் சுற்றுப்பாதை தொலைவை படிப்படியாகக் குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி, சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வரும் சுற்றுப் பாதை தொலைவு நிலவின் ஈா்ப்பு விசைக்குள் முதல் முறையாக ஆகஸ்ட் 7 ஆம் தேதி திட்டமிட்டப்படி முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 
 

மூன்றாவது முறையாக கடந்த திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு குறைக்கப்பட்டது. அப்போது, உந்து கலனில் உள்ள திரவ எரிவாயு கருவி இயக்கப்பட்டு விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது. சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 4313 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவின் வட்டப் பாதையில் விண்கலம் பயணித்தது. 

ஆகஸ்ட் 9 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவை குறைக்கும்  இரண்டாவது கட்ட முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 

சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 174 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 1437 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவின் வட்டப் பாதையில் விண்கலம் பயணித்தது. 

அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) பகல் 12 மணிக்கு நிலவின் ஈா்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவை குறைக்கும் மூன்றாவது கட்ட முயற்சியை வெற்றிகரமாக இஸ்ரோ மேற்கொண்டது.

சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 150 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 177 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவின் வட்டப் பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. 

இந்த நிலையில், நிலவின் ஈா்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவை குறைக்கும்  நான்காவது கட்ட முயற்சியை புதன்கிழமை (ஆக 16) காலை 8.30 மணிக்கு வெற்றிகரமாக இஸ்ரோ மேற்கொண்டது.

தற்போது குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 163 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவின் வட்டப் பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. 

அதைத் தொடா்ந்து விண்கலத்தின் உந்து கலனில் இருந்து லேண்டா் சாதனம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.