

ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையாக மழை பெய்து வருவதால், சிம்லாவின் சம்மர் ஹில், கிருஷ்ணா நகர் மற்றும் ஃபாக்லி ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சிம்லாவில் உள்ள சிவன் கோயில் இடிந்து விழுந்ததன் காரணமாக 15 பேர் பலியாகியுள்ளனர். பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதால், தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளிலும், சாலைகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மாநிலத்தில் இதுவரை 157 சதவீத மழைப் பதிவாகியுள்ளது. இமாசலம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.
கனமழை, நிலச்சரிவு காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல் பல்கலைக்கழகம் ஆக.19 வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
மாநிலத்தில் தேசிய பேரழிவாக அறிவிக்கவும், மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2000 கோடியை விடுவிக்கவும் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.