

மும்பை: சாலை விபத்தில் டிரக் மோதி பலியானவர் தலைக்கவசம் அணியாததால், அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் 30 சதவீதம் குறைக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு மும்பை அருகே போவை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் மீது டிரக் மோதி அவர் பலியானார். இதில், அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் தாய்க்கு ரூ.1.4 கோடிக்கு பதிலாக, அவர் தலைக்கவசம் அணியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 30 சதவித இழப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு ரூ.1 கோடி, வட்டியுடன் இழப்பீடாக வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
டிரக் ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்ட நிலையில், பலியானவரும் சாலை விதிகளை மதித்து தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
விபத்தில் பலியானாவர் தலைக்கவசம் அணியவில்லை. எனவே, அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது என்று வாரியம் அறிவித்துள்ளது.
பலியான சத்தியபிரகாஷ், 2014ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ரூ.50000 ஆயிரம் வருவாய் ஈட்டிவந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு ரூ.95.2 லட்சத்தை (வட்டி இல்லாமல்) இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.