உ.பி.யில் கிருஷ்ண ஜன்மபூமி கோயில் அருகே வீடுகள் இடிப்பு: உச்சநீதிமன்றம் 10 நாள்களுக்குத் தடை

உத்தர பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ண ஜன்மபூமி கோயில் அருகே சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக 100 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள வீடுகளை இடிக்க 10 நாள்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ண ஜன்மபூமி கோயில் அருகே சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக 100 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள வீடுகளை இடிக்க 10 நாள்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமி கோயில் அருகே வசிப்போரின் வீடுகளை ரயில்வே அதிகாரிகள் இடித்துள்ளனா். ரயில்வேக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மதுராவில் இருந்து பிருந்தாவனம் வரையுள்ள குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற அந்த இடம் தேவைப்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினா்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் யாகுப் ஷா என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமாா், எஸ்விஎன் பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘கிருஷ்ண ஜன்மபூமி அருகே உள்ள வீடுகள் 1800-ஆம் ஆண்டு முதல் உள்ளன. தற்போது அங்கு 100 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. 70 முதல் 80 வீடுகள்தான் எஞ்சியுள்ளன. அவற்றையும் இடிக்கவிட்டால், இந்த வழக்கு பயனற்ாகிவிடும்’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு 10 நாள்கள் தடை விதித்த நீதிபதிகள், மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா். இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com