காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

ஸ்டெம் கல்வி உதவித்தொகைக்கு இன்ஃபோசிஸ் அறக்கட்டளை ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனமான இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் ஏழை மாணவிகளுக்கு ஸ்டெம் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்க ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது.

Published On :

புதுதில்லி: இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனமான இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் ஏழை மாணவிகளுக்கு ஸ்டெம் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்க ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, புகழ்பெற்ற கல்லூரிகளிலிருந்து ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் ஏதேனும் ஒன்றில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் 2,000 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

'ஸ்டெம் ஸ்டார்ஸ்' ஸ்காலர்ஷிப், ஸ்டெம் படிப்பு காலத்திற்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவுகள் மற்றும் படிப்பு பொருட்களை ஈடுசெய்ய உதவும் என்று இன்போசிஸ் அறக்கட்டளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் அறக்கட்டளை அறங்காவலர் சுமித் விர்மானி இதுபற்றி கூறுகையில், இந்தியாவில் நிலவும் வறுமையால் பல இளைஞர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகின்ற நிலையில் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அதனால்தான், 'ஸ்டெம் ஸ்டார்ஸ்' ஸ்காலர்ஷிப் திட்டம் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு ஒரு முழுமையான கல்வி சூழலை வழங்க முயல்கிறது என்றார்.

இந்நிலையில், அதன் தொடக்க ஆண்டில், இந்த உதவித்தொகையானது ஐ.ஐ.டி, பிட்ஸ்-பிலானி, என்.ஐ.டி. மற்றும் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய என்.ஐ.ஆர்.எஃப் (தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு) அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை உள்ளடக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.