

கேரள முதல்வர் பினராயி விஜயன் முதன்முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று பயணம் மேற்கொண்டார்.
இந்தியாவில் 2024-25ஆம் ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க கடந்த 2021-22 மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கேரளத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரம்-காசா்கோடு இடையே ஏப்ரல் 25ஆம் தேதி பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் முதன்முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று பயணம் மேற்கொண்டார்.
அவர், மாலை 3.40 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் சென்றடைந்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு கண்ணூர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.