மணிப்பூர் வன்முறை: மூன்று அறிக்கைகள் தாக்கல்!

மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி: மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் குகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது. 3 பேர் கொண்ட குழு வன்முறை தொடர்பாக விசாரணை, இழப்பீடுகள், மறுவாழ்வு உதவி உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com