
ஜெய்பூர்: ராமேசுவரத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த இளைஞர், ரயில் கழிப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சித்தூர்கர் பகுதியை சேர்ந்தவர் அக்ஷய்(வயது 22). இவர் செரிபியா நாட்டுக்கு அடுத்த மாதம் மருத்துவம் படிப்பதற்காக செல்லவிருந்தார்.
இந்நிலையில், குடும்பத்துடன் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் ராமேசுவரம் வந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
கஜுராஹோ - உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, கழிப்பறை சென்ற அக்ஷய்க்கு மாரடைப்பு ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதையும் படிக்க | ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி... என்.எல்.சி.க்கு ஒரு நீதியா...?
உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அக்ஷய்யின் உயிரிழப்பை உறுதி செய்துள்ளனர்.
மருத்துவப் படிப்புக்கு வெளிநாடு செல்லவிருந்த இளைஞர், கோவிலுக்குச் சென்று வீடு திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...