
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஹரியாணாவை தொடர்ந்து அசாமில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
இதுதொடர்பாக மாநில கல்வித்துறை அதிகாரி கூறுகையில்,
சந்திரயான்-3 விண்கலமானது எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் சுமார் ஒரு மாத பயணத்தைத் தொடர்ந்து, விண்கலத்தில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் இன்று மாலை 6 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.
படிக்க: ஜெயிலரில் நடித்த ஜாஃபருக்கு ரஜினி கொடுத்த பரிசு என்ன?
இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிகள் இன்று மாலை 6 மணி வரை செயல்படும் இதுதொடர்பான அறிவிப்பை பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
சந்திரயான் லேண்டிங் மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என்று அவர் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...