
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஹரியாணாவில் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் கன்வார் பால் தெரிவித்தார்.
மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இன்று(புதன்கிழமை) மாலை 5.44-க்கு பள்ளிகளில் இதன் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
அதன்படி புதன்கிழமை மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளிகளைத் திறக்க மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அனைவரிடத்திலும் ஆா்வத்தையும் மிகுந்த எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதோடு, இளைஞா்கள் மனதில் ஆராய்ச்சி மீதான ஆா்வத்தை தூண்டுவதாகவும் அமையும். இந்திய அறிவியல்-தொழில்நுட்பத் திறனுக்கு கிடைக்கப்போகும் இந்த வெற்றி அனைவருக்குமான கொண்டாட்டமாகவும் பெருமையாகவும் அமையும். விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை ஊக்குவிப்பதற்கான உந்துகோலாகவும் இந்த வெற்றி அமையப்போகிறது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.