
புது தில்லி: பாலின மாற்றத்துக்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் மாற்றுப் பாலினத்தவரின் கடவுச்சீட்டில், அதற்கேற்ப மாற்றங்களை செய்வதற்கான வழிமுறைகளைக் காணும்படி, அதிகாரிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கை ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில், தொடர்ந்த வழக்கில், மாற்றுப் பாலினத்தவராக தனது கடவுச் சீட்டில், பெயர், பாலினம் மற்றும் பாலின மாற்றத்துக்கான அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட முக அடையாள மாற்றங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இதுபோல, அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பல மாற்றுப் பாலினத்தவர்களும் இதே சிக்கலை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், ஏராளமானே மாற்றுப் பாலினத்தவர், கடவுச்சீட்டை புதுப்பிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...