சாலை, வடிகால் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார் கேஜரிவால்!

தில்லியில் உள்ள துவாரகா சட்டமன்றத் தொகுதியின் தஷ்ரத்புரி காலனியில் சாலை மற்றும் வடிகால் மேம்பாட்டுத் திட்டங்களை அந்த மாநில முதல்வர் அரவிந்த கேஜரிவால் இன்று தொடங்கி வைத்தார். 
சாலை, வடிகால் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார் கேஜரிவால்!

தில்லியில் உள்ள துவாரகா சட்டமன்றத் தொகுதியின் தஷ்ரத்புரி காலனியில் சாலை மற்றும் வடிகால் மேம்பாட்டுத் திட்டங்களை அந்த மாநில முதல்வர் அரவிந்த கேஜரிவால் இன்று தொடங்கி வைத்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது, 

அங்கீகரிக்கப்படாத காலனிகளின் அனைத்துச் சாலைகளையும் அமைக்கவேண்டும் என்ற தனது நோக்கத்தில், தஷ்ரத்புரி காலனியில் 76 புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

வைஷாலி, டப்ரி விரிவாக்கம், துர்கா பூங்கா, வசிஸ்ட் பூங்கா, ரகுநகர், சாகர்பூர் ஆகிய பகுதிகளில் சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், புதிய குடிநீர் இணைப்புகள், எரிவாயு குழாய்கள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

இப்பணிகள் நிறைவடைந்ததால், அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகளின் நிலை கடந்த காலங்களில் மிகவும் மோசமாக இருந்ததாகவும், தற்போது அவை அனைத்தும் மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு மக்களுக்கு சரியான உறவுகள் கூட இல்லை. ஆனால் தற்போது சாலைகள், வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் கண்ணியமாகவும் மரியாதையுடனும் வாழ்கிறார்கள். 

முந்தைய அரசு ஒன்றிரண்டு சாலைகள் அமைத்து வாக்குகளைப் பெற்றன. ஆனால் நான் ஓரிரு சாலைகள் மட்டும் அமைத்து ஓட்டு சேகரிக்கமாட்டேன். அனைத்து சாலைகளையும் கட்டி முடிப்பேன் என்றார். தில்லி மக்கள் நேர்மையான அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒவ்வொரு அம்சத்திலும் பணத்தை மிச்சப்படுத்துகிறோம். அதனால்தான் எங்களால் இவ்வளவு பணிகளைச் செய்ய முடிகிறது என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com