
நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்து நாடுதிரும்பிய பிரதமா் மோடி, சந்திரயான்3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக நேரடியாக பெங்களூருக்கு சென்றார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும். நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்.
2019-ல் சந்திரயான் - 2 நிலவில் தனது தடத்தை பதித்த இடம் திரங்கா(மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா எனப் பெயர் சூட்டப்படுகிறது.
இதையும் படிக்க: லேண்டர் இறங்கிய இடத்திற்கு பெயர் சிவசக்தி: பிரதமர் மோடி
சந்திரயான்-3 வெற்றிக்கு பெண் விஞ்ஞானிகள் முக்கியப் பங்காற்றியுள்ளார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.