
புது தில்லி: தில்லியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, தில்லி முழுவதும் உள் பல மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இது தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில்,18 நாட்டு தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
இதையடுத்து தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தில்லியில் 5-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களில் குறிப்பாக சிவாஜி பூங்கா முதல் பஞ்சாபி பாகிஸ்தான் வரையிலான மெட்ரோ நிலையங்களில் "நீதிக்காக சீக்கியர்கள்" என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் சார்பில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
தில்லி பனேகாகாலிலஸ்தான், காலிஸ்தான் ஜிந்தா பாத் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இது தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தில்லி காவல்துறை ஆணையர் (மெட்ரோ) ஜி ராம் கோபால் நாயக் கூறுகையில், தில்லி மெட்ரோ நிலையங்களின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது குறித்த தகவல் “காலை 11 மணிக்கு தான் எங்களுக்கு கிடைத்தது.
இதுகுறித்து இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 153 ஏ, பிரிவு 505 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு ஏற்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் அவர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் தில்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நேரத்தில், மெட்ரோ நிலையங்களின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...