இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை வலுவுடன் எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து, ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கடந்த மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றது.
இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது. பாஜகவுக்கு இக்கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பாட்னாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மும்பையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான இந்திய கூட்டணியின் உத்திகள் குறித்து விவாதிப்போம். மேலும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் விவாதிக்கப்படும்.
எங்கள் கூட்டணியில் இன்னும் சில அரசியல் கட்சிகள் இணையும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் அதிகபட்ச கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறேன். நான் அந்த திசையில் வேலை செய்கிறேன். என் மீது எனக்கு ஆசை இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.