நிலச்சரிவால் கங்கோத்ரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

உத்தரகாசி மாவட்டம் சின்யாலிசூர் பகுதியில் உள்ள ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலம் சரிந்தால் 100 மீட்டர் தூரத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நிலச்சரிவால் கங்கோத்ரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

உத்தரகாசி: உத்தரகாசி மாவட்டம் சின்யாலிசூர் பகுதியில் உள்ள ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலம் சரிந்தால் 100 மீட்டர் தூரத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மற்றும் எல்லை சாலைகள் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட காலமாக இந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு நெடுஞ்சாலையின் பெரும் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரி அணை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்ததிலிருந்து, இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அணையின் நீா்மட்டம் இன்று 822.14 அடியாக இருந்து வரும் நிலையில், தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்து வருவதால், தேசிய நெடுஞ்சாலை எண்-94, சுமார்100 மீட்டர் நீர்த்தேக்கத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

வால்மீகி மொஹல்லா, பொதுப்பணித் துறை, வனத்துறை, சமூக சுகாதார மையம், ஜக்வாடி மொஹல்லா, ஜோகத் சாலை, பிஜ்ல்வான் மற்றும் ரமோலா மொஹல்லா, அரச மண்டிக்கு வளைவு பாலம், ஹதியாரி மற்றும் கரையோரங்களில் அமைந்துள்ள பிற பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.

ஆகஸ்ட் 25ம் தேதியன்று, எல்லை சாலைகள் அமைப்பின் உதவி பொறியாளர் வினோத் குமார் தியோரி, தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இந்திய லிமிடெட் கூடுதல் பொது மேலாளர் தினேஷ் சுக்லா, துணை மேலாளர் அதுல் பகுகுணா மற்றும் பிற அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com