

கொச்சியிலிருந்து பெங்களூரு சென்ற இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பையடுத்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
இன்று காலை 6E6482 என்ற விமானம் பெங்களூருவுக்கு காலை 10.30-க்கு புறப்பட திட்டமிடப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து உடனே, சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இறக்கிவிடப்பட்டன.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்த குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குண்டுவெடிப்பு குறித்து சம்பவ இடத்துக்கு சோதனை செய்ய மோப்ப நாய் குழுவும் வரவழைக்கப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பிறகு பெங்களூருக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.