
மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பட்டாசுகளைத் தயாரிக்கும் பணியில் ஆலைத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது நேற்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடா்ந்து, ஆலையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.
இந்தச் சம்பவத்தையடுத்து, ஆலையின் உரிமையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு சேதப்படுத்தினர். உரிமையாளரின் மகன் ஆலையில் வேலை பாா்த்துக் கொண்டிருந்ததால், அவரும் விபத்தில் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
படிக்க: தனி ஒருவன் - 2: இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் சட்டவிரோத பட்டாசு ஆலையின் உரிமையாளர் ஒருவரை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவை சோ்ந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...