தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தங்கத்துக்கு மாறுவேடம்.. தில்லி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

குவைத்தில் இருந்து வெள்ளி முலாம் பூசி கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2023, 9:18 am IST


புது தில்லி: குவைத்தில் இருந்து வெள்ளி முலாம் பூசி கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்த மூன்று பயணிகளின் உடைமைகளை சோதனை  செய்ததில் அவர்களிடம் 4001 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.06 கோடி என்று கணக்கிடப்பட்டுளள்து.

இது குறித்து தில்லி சுங்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, வெள்ளி முலாம் பூசப்பட்ட 4001 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதன் மதிப்பு ரூ.2.06 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குவைத் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுங்கத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், விதவிதமாக தங்கக் கடத்தல் நடந்து வருகிறது. தற்போது, தங்க நகைகளை, வெள்ளி முலாம் பூசி கடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.